கவிஞர், ஆவணப்பட இயக்குனர், லீனா மணிமேகலை மீடூ குறித்து தினமணி.காம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். மீடூ எழுச்சி உலகம் முழுவதிலுமே இருந்த போதிலும் தமிழ் மண்ணை அது தொட்டது வெகு தாமதமாகத் தான். தமிழ்நாட்டிலும் கூட பாதிக்கப்பட்ட பெண்களின் மீடூ ஆதங்கம் எந்த அளவுக்கு புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றால் அதைச் சரியான அளவில் புரிந்து கொண்டவர்களின் சதவிகிதம் மிக மிகக்குறைவு என்று தான் சொல்ல வேண்டும். ‘மீடூ’ வை பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த மோசமான பாலியல் அச்சுறுத்தலானது இன்னொரு பெண்ணுக்கு நேராமல் தடுத்து நிறுத்த உதவும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நம் தமிழ் சமூகம் அதை பெண்கள் தங்களது சுயநலத்துக்காக பிடிக்காதவர்களைப் பலி வாங்கப் பயன்படுத்தும் ஆயுதமாகவோ அல்லது தங்களைத் தாங்களே பிரபலப் படுத்திக்கொண்டு மட்டமான பப்ளிசிட்டி தேடிக் கொள்ளப் பயன்படுத்தும் ஆயுதமாகவோ கற்பிதம் செய்து கொள்கிறது. இது தவறான புரிதல். அதை நீக்கி மீடூ குறித்த சரியான புரிதலை உண்டாக்குவதே இந்த நேர்காணலின் நோக்கம்.